தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வாழ்கின்ற உழைக்கும் ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும், அதிகாரப்பகிர்வை நோக்கி எழுச்சியோடு நடைபோடும் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் அரசியல்இயக்கம் “தேசியசமூகநீதிக்கட்சி” .
Events
புதுச்சேரி மாநிலத்தில் அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நமது சமுதாயதின் மக்களின் சார்பாக பல்வேறு கோரிக்கையைகளுடன் நமது சமுதாய மக்கள் மற்றும் நமது கட்சி நிருவாகிகளுடன் சந்தித்து அவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் நம் தேசிய தலைவர் அண்ணன் முனைவர். வெங்கடேஷ் குமார் அவர்கள் தெளிவாக எடுத்துக்கூறனார்கள், கட்சி சார்ந்த நிருவாகி உறுப்பினர்கள் இருந்தனர்
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தெய்வகுமார்
அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை
தேசிய சமூகநீதி கட்சி
நிறுவனர் / தலைவர் முனைவர் மா. வெங்கடேஷ் குமார் எழுதிய நூல்
ராஜகுல வீரபத்திரர் வரலாறும் வழிபாடும் வெளியீட்டு விழா ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் முளீயனூர் கிராமத்தில் அகோர வீரபத்திரர் கோயிலில் வெளியிடப்பட்டது
தொழில் சார்ந்த சமூக மக்களின் நலன் , தொழிலாளர்களின் நலன், ஒடுக்கப்பட்ட , மறுக்கப்பட்ட, அநீதி இழைக்கப்பட்ட,அடக்குமுறைக்கு ஆளாகிய மக்களுக்கு சமூகநீதி கிடைத்திடவும், அவர்களுக்கென தனி அரசியல்பிரதிநிதித்துவத்தைமுழுமையாக பெற்றுத்தரும் நோக்கில் 11-03-2024 அன்று துவங்கப்பட்ட கட்சி.
About DSNK PARTY
தொழில் சார்ந்த சமூக மக்களின் நலன் , தொழிலாளர்களின் நலன், ஒடுக்கப்பட்ட , மறுக்கப்பட்ட, அநீதி இழைக்கப்பட்ட,அடக்குமுறைக்கு ஆளாகிய மக்களுக்கு சமூகநீதி கிடைத்திடவும், அவர்களுக்கென தனி அரசியல்பிரதிநிதித்துவத்தைமுழுமையாக பெற்றுத்தரும் நோக்கில் 11-03-2024 அன்று துவங்கப்பட்ட கட்சி. தொழில் ரீதியாக சாதிப்பட்டியலில் இடம்பெறுகின்ற சமூகத்தினுடைய தொழில் பெயரை நீக்கவும், சமூக இழிவு நிலையில் இருந்து உரிய சட்டபாதுகாப்பு வழங்கவும் “அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை” என்ற பெயரில் கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிரமாக இயங்கிவரும் ஒரு சமூகத்தின் இயக்கமானது அனைத்து மக்கள் நலன் கருதி,
பல்வேறு சமூக மேம்பாடுகளை நோக்கியும், பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஒருங்கிணைத்து, விளிம்புநிலை மக்களின் வாழ்வை மேன்மையுறச்செய்யும் இலக்கோடு அரசியல் கட்சியாக உதயமாகி, தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வாழ்கின்ற உழைக்கும் ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும், அதிகாரப்பகிர்வை நோக்கி எழுச்சியோடு நடைபோடும் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் அரசியல்இயக்கம் “தேசியசமூகநீதிக்கட்சி” .
Our Promise
தமிழகம் மற்றும் இந்தியாவெங்கும் வாழுகின்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களின் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை, அடையாள உரிமைகளை மீட்பது.
Leader venkatesh kumar
இவர் தஞ்சாவூர் மாவட்டம், திட்டை கிராமத்தில்
தந்தையார் : திரு.மாணிக்கம், முன்னாள் இந்தியராணுவ வீரர்
தாயார் – திருமதி. கலைச்செல்வ ிஇவர்களின் நான்காவது மகனாகப்பிறந்தார்.
இவர் திருமதி.பாரதி, B.E,M.E என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தன்விகாஸ்ரீ என்கிற மகளும் , கிருத்திகன் என்கிற மகனும் உள்ளனர்.
இவர் குழந்தை பருவத்திலிருந்தே சமூகசேவைகளில் ஈடுபட்டுவந்தஇவர் பள்ளிப்படிப்பை தஞ்சாவூர் மாவட்டத்தில் முடித்துக்கொண்டு , மேற்படிப்பு பொறியியல் பட்டம், SSP – புத்தூரிலும், சட்டப்படிப்பு SV சட்டக்கல்லூரி, திருப்பதியிலும் பயின்றார். இவரது சமூக சேவையை மெச்சிடும் வகையில், உலகத்தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
Join us in keeping the party alive
தமிழகம் முழுவதும் வாழும் “ராஜகுலத்தோர்” சமூகமக்களின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும், அரசியல் பிரதிநிதித்துவம் பெறவும் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், தரணியெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் விடுதலையை வென்றெடுக்க தன்னை அர்பணித்துக்கொள்கிறது.