Dr. Venkatesh Kumar

முனைவர். மா.வெங்கடேஷ்குமார்

நிறுவனர் / தேசியத்தலைவர்

தேசிய சமூகநீதிக்கட்சி

அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை,

புதியஎண்.155, பழையஎண்.30,

விநாயகபுரம் 2வதுதெரு,

அரும்பாக்கம், சென்னை -600106.

 இவர் தஞ்சாவூர் மாவட்டம், திட்டை கிராமத்தில் தந்தையார் : திரு.மாணிக்கம், முன்னாள் இந்திய ராணுவ வீரர் தாயார்திருமதி. கலைச்செல்வ ிஇவர்களின் நான்காவது மகனாகப்பிறந்தார்.

My Story

இவர் திருமதி.பாரதி, B.E,M.E என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தன்விகாஸ்ரீ என்கிற மகளும் , கிருத்திகன் என்கிற மகனும் உள்ளனர்.

இவர் குழந்தை பருவத்திலிருந்தே சமூகசேவைகளில் ஈடுபட்டுவந்தஇவர் பள்ளிப்படிப்பை தஞ்சாவூர் மாவட்டத்தில் முடித்துக்கொண்டு , மேற்படிப்பு பொறியியல் பட்டம், SSP – புத்தூரிலும், சட்டப்படிப்பு SV சட்டக்கல்லூரி, திருப்பதியிலும் பயின்றார். இவரது சமூக சேவையை மெச்சிடும் வகையில், உலகத்தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

கல்லூரி பருவத்தில் தேசியமாணவர் படையில் இணைந்து பணியாற்றியவர், கல்லூரி காலத்தில் சுனாமி ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவி செய்து பெருமளவிலான சேவைகள் செய்தார், தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த இவர் , தான் வாழும் பகுதியில் கேட்பாரற்ற, ஆதரவற்ற சடலங்களை காவல்த்துறையோடு நல்லடக்கம் செய்தவர் . மிகக்கொடிய கொரோனா காலக்கட்டத்தில் மக்களோடு மக்களாக இருந்து பல்வேறு உதவிகளை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து பெரும் செலவு செய்து , உணவு, உடை, மருந்து பொருட்கள் என வழங்கி பேருதவிகள் செய்தார். இவர் 2019 ஆம் வருடம்   தன்னை திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கினார்.

 அரசியல் மற்றும் தேர்தல்களில் மேற்கொண்ட பணிகள்:

காவேரி உரிமை போராட்டம், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் , முல்லை பெரியார் போராட்டம், ஈழத்தமிழர்கள் போராட்டம், ஆனவப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்கள் என முக்கிய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

தான் சார்ந்த கட்சியில் 2019, தஞ்சை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் திரு. TKG.நீலமேகம் அவர்களுக்காக தேர்தல் பொறுப்பாளாராக பணியாற்றி வெற்றியினை தேடிக்கொடுத்தார்.

2019, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் , TNPL காகிதத்தொழிற்சாலை, நகர பொறுப்பாளராக இருந்து, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்காக தேர்தல் பணியாற்றி அதிகப்படியான வாக்குகளைப்  பெற்றுக்கொடுத்தார்

2021, இல் திராவிட முன்னேற்றக்கழகத்தில் மாநில மாணவரணி துணைச்செயலாளராகப் பதவி வகித்தார்.

2021, சட்டமன்றத்தேர்தலில் ஒரத்தநாடு சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் திரு.எம்.ராமச்சந்திரன் அவர்களுக்காக தேர்தல் பணியாற்றினார்.

தான் சார்ந்த சமுதாயத்தினுடைய அவல நிலையையும், மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் முன்னேற்றம் அடையாமல் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியுற்று பல முன்னெடுப்புகள் எடுத்து நடைபெறாத காரணத்தினால் ,

2022 வாக்கில் திமுகவில் இருந்து வெளியேறி அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்த இவர் , தொழில் சார்ந்த சமூக மக்களின் நலன் , தொழிலாளர்களின் நலன், ஒடுக்கப்பட்ட , மறுக்கப்பட்ட, அநீதி இழைக்கப்பட்ட, அடக்குமுறைக்கு ஆளாகிய ஒட்டு மொத்த மக்களின் அவல நிலையினைக்கண்டு வேதனையுற்று அனைவருக்கும் சமூக நீதி கிடைத்திடவும், அவர்களுக்கென தனி அரசியல் பிரதிநிதித்துவத்தை முழுமையாக பெற்றுத்தருவதற்கும், அனைவருக்கும் ஆதரவாக போராடி வருகிறார்.