கட்சியின்கொள்கைகள்

 

1) தமிழகம் மற்றும் இந்தியாவெங்கும் வாழுகின்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களின் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை, அடையாள உரிமைகளை மீட்பது.

 2) தொழில் சார்ந்த பெயரால் அடையாளம் செய்யப்படும் சமூகங்களின் பெயரை சாதிப்பட்டியலில் மாற்றி அமைப்பது

 3) இந்தியா முழுவதும் வாழும் எளிய உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையையும், அரசியல் உரிமைகளையும், பொருளாதார உரிமைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் மீட்டெடுக்கவும், பிளவுகளை நீக்கி, ஒற்றுமையை உருவாக்குவது, அவர்களை ஒருங்கிணைத்து அரசியல் பிரதிநிதித்துவப்படுத்துவது.

 4) சமத்துவம், சமூகநீதி, சமபங்கு என்கிற அரசியல் நிலைப்பாட்டின் வழியாக சமூக நல்லிணக்கத்தையும், சமூக மேம்பாட்டையும் அடைதல்.

5) எளிய உழைக்கும் சமூகங்களின் மீது ஏவப்படும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிரான சட்டப்பாதுகாப்பை வலியுறுத்துதல், அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையிலான நீதி கோரல்.

ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கான மறுக்கப்பட்ட உரிமைகளை சமன் செய்தல்.

6) அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணித்தல்.

7) அனைவருக்கும் தரமான உணவு, வசிப்பிடம், கல்வி, மருத்துவம், அடிப்படைக்கட்டுமான உரிமைகள், தரமான சாலை வசதி, போக்குவரத்து வசதி போன்றவவை இலவசமாகக்கிடைத்திட வகைசெய்தல்.

8) சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கி தூய்மையான உலகை வருங்கால தலைமுறைக்கு வழங்குதல்.

9) வேளாண் குடிமக்களின் உரிமைகளையும், அடையாளங்களையும் மீட்டல்.

10) மக்களுக்கான மக்களாட்சி தத்துவத்தை காத்தல் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கான உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தல்.

11) இந்திய மக்களாட்சியின் மாண்புகளைக்காத்தல், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுதல், பொருளாதார மேம்பாடு அடைதல்.

12) போதைப்பொருட்களின் பயன்பாடில்லாத, மிகச்சிறந்த உடல்நலமும், மனநலமும் கொண்ட இளைஞர் சமூகத்தை உருவாக்குதல்.

13) தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை தற்சார்பு பொருளாதார வளர்ச்சி பெற்றவர்களாகவும், தொழில் முனைவோராகவும் உருவாக்குதல். தேசத்தை வளப்படுத்தல்.

14) பெண்கள் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன் ஆகியவற்றை மேம்படுத்தி உலகளாவிய அளவில் தேசத்தை முன்னேற்றப்பாதையில் நடைபோட வைத்தல்.

 15) இந்து, கிறித்தவர், இஸ்லாமியர், சீக்கியர், பௌத்தர், சமணர் போன்ற மதபேதங்களை நீக்கி, தேசப்பற்றுடன்இந்தியர்என்ற ஒற்றை அடையாளத்தை வென்றெடுப்பது.

16) தமிழர் பண்பாட்டையும், நாட்டார் வழிபாட்டையும் பிறசமூகங்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் போற்றுதல்

17) சாதி, மத, இனபேதங்களை அகற்றி அழகிய பொது சமூகத்தைக்கட்டமைத்தல்.

18) சாதிய மேலாதிக்கத்தையும், அரச வல்லாதிக்க போக்குகளையும் ஒழிக்க தொடர்ந்து போராடுதல்.

19) விளிம்பு நிலை மக்களுக்கு இழைக்கப்படும் சமூகக்கொடுமைகளுக்கு சட்டரீதியாக போராட்டங்களை முன்னெடுப்பது.

20) எளிய உழைக்கும் மக்களையும், பூர்வீக குடிமக்களையும் ஆட்சிஅதிகாரத்தில் அமர்த்துதல்.